காவல்துறையில் 3000 பேருக்கு பதக்கம்: முதலமைச்சர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 11:38 am

3000-medal-in-police-department

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக காவல்துறையில் 3000 பேருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

தமிழக காவல்துறையில், இந்தாண்டு முதல் காவல் துறைக்கான பதக்கத்தின் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, காவல்துறையில், காவலர், தலைமைக்காவலர், சிறப்பு சார்பு ஆய்வாளர், ஆயுதப்படை ஹவில்தார்கள் என 3,000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்படும் எனவும், தீயணைப்பு துறையில் 120 பேருக்கும், சிறைத்துறையில் 60 பேருக்கும் முதல்வரின் சிறப்பு பணி பதக்கம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதக்கம் பெறுவோருக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் மாதாந்திர பதக்கப்படியாக தலா ரூ.400 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.