கோடநாடு கொள்ளை: குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வெற்றிபெறுவோம் - ஓபிஎஸ்

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 12:01 pm
we-will-face-the-accusations-and-win

கோடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பான ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர், " கோடநாடு கொள்ளை விவகாரம் நடந்து முடிந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அரசியல் ரீதியாக எதிர்கொள்ள சக்தியற்ற எதிர்கட்சிகள் பொய்யான, அவதூறான தகவல்களை பரப்பி, அரசியல் லாபம் தேடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்காது, எதிர்கட்சிகளின் பொய்யான ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்க்கொண்டு வெற்றிகொள்வோம். நியாயம் எங்கள் பக்கம் உள்ளது என தெரிவித்தார்.

மேலும்,  பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் தவறான தகவல்களை பரப்புவது சட்டப்படி குற்றம் ஆகும். ஆதாரமில்லாத குற்றசாட்டுகளை முன் வைப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணி குறித்து உடனடியாக பேசி முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிவித்தார். 

முன்னதாக, பொங்கள் திருநாளை முன்னிட்டு தமிழ மக்கள், இந்தியர்கள், பத்திரிக்கை, தொலைக்காட்சி நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close