கோடநாடு வீடியோ: கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் சென்னை அழைத்துவரப்பட்டனர்

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 12:24 pm
sayaan-and-manoj-were-brought-to-madras

கோடநாடு வீடியோ தொடர்பாக நேற்று டெல்லியில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் சென்னை அழைத்து வரப்பட்டனர். 

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை குறித்து பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில், கொள்ளையில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் எடுத்த பேட்டியும், கொலை, கொள்ளையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்த குற்றச்சாட்டை மறுத்த முதலமைச்சர் பழனிசாமி இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதனடிப்படையில், தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற தனிப்படை போலீசார் சயான், மனோஜ் ஆகியோரை கைது செய்தனர்.  

கைது செய்யப்பட்ட சயான்,  மனோஜ்  ஆகியோர் விமானம் மூலம் இன்று அதிகாலை 4.50 மணிக்கு சென்னை அழைத்து வரப்பட்டனர். இவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்காக பழைய மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close