பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்..

  Newstm Desk   | Last Modified : 16 Jan, 2019 08:34 am
palamade-jallikattu-tournament-started

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் பங்கேற்பதற்காக 800 மாடுபிடி வீரர்களும் 900 காளைகளுக்கும் முன்பதிவு செய்துள்ளனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடி வாசல் வழியே துள்ளி குதித்து வரும் மாடுகளை அடக்க வீரர்கள் முயன்று வருகின்றனர். 

வெற்றிபெறும் வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்ககாசு, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன. பாதுகாப்பிற்காக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்போட்டிகளை காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். 

newstm.in

 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close