முதியோர் எண்ணிக்கை குறைய மதுவே காரணம்: வைரமுத்து

  Newstm Desk   | Last Modified : 16 Jan, 2019 10:16 am
decrease-the-number-of-elderly-people

தமிழகத்தில் முதியவர்களின் எண்ணிக்கை குறைய மதுவே காரணம் என கவிஞர் வைரமுத்து குற்றம்சாட்டியுள்ளார். 

திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கிராமங்களில் அதிகமாக இருந்த முதியவர்களின் எண்ணிக்கை குறைய மதுவே காரணம் என கூறினார்.  

மேலும் தமிழக அரசின் வருமானத்திற்காக 20 சதவீதம் மக்கள் மதுபோதையில் மயங்கி கிடக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர், தற்போது ஆட்சியில் உள்ள அரசும், இனி ஆட்சிக்கும் வரும் அரசும் மதுவை ஒழிக்க கொள்ளை முடிவு எடுத்தால் தமிழர்கள் கொண்டாடுவார்கள்" என தெரிவித்தார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close