எம்.எல்.ஏக்கள் பெயரை வெளியிட தயாரா? அமைச்சருக்கு ஜெ.அன்பழகன் சவால்.

  Newstm Desk   | Last Modified : 16 Jan, 2019 03:00 pm
anbalagan-is-the-challenge-to-the-minister

அதிமுக அரசு ஆட்சியில் நீடிக்க திமுக எம்.எல்.ஏக்களே விரும்புவதாக கூறும் அமைச்சர் ஜெயகுமார், அவர்களின் பெயரை வெளியிட தயாரா? என திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் சவால் விடுத்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன், தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், திருக்குள் ஒப்புவித்த மாணவர்களுக்கு பரிசுகளையும், இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ அன்பழகன், திருவள்ளுவருக்காக கன்னியாகுமரியில் 133 அடி உருவசிலை அமைத்ததும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிலை அமைத்ததும் திமுக தான் எனவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, திருக்குறளுக்கு எழுதிய உரை உலகப் புகழ் பெற்றது எனவும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சி நீடிக்க திமுக எம்.எல்.ஏ.க்களே விரும்புவதாக கூறும் அமைச்சர் ஜெயகுமார், யார், யார் அந்த எம்.எல்.ஏ.க்கள் என்ற விபரத்தை வெளியிடத் தயாரா என கேள்வி எழுப்பினார். கோடநாடு விவகாரத்தில், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பத்திரிக்கை ஆசிரியர் மேத்யூவிடம் பாய்வதை விட்டு விட்டு கே.பி.முனுசாமி திமுகவிடம் பாய்வது ஏன் எனவும் வினவினார். 

மேலும், இந்தியாவில் உள்ள எந்த முதலமைச்சர் மீதும் கொலை குற்றச்சாட்டு இல்லை என்றும் முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காகவே, பா.ஜ.க. கோடநாடு விவகாரத்தில் மென்மையாக செயல்படுகிறது என குற்றஞ்சாட்டினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close