ஆளுநர் சந்திப்பில் ஸ்டாலின் கோரிக்கையை நிராகரிக்கும் படி வலியுறுத்தினோம்: வைத்திலிங்கம்

  Newstm Desk   | Last Modified : 16 Jan, 2019 03:45 pm
rejecting-the-stalin-s-request

கோடநாடு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் கருத்துக்கள் பொய்யானவை என்றும், கோரிக்கையை நிராகரிக்கும்படி தெரிவிக்க ஆளுநரை சந்தித்ததாகவும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பசுபதி கோவிலில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோலப்போட்டி, கபடி, இறகு பந்து, வழுக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. உரியடி போட்டியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன் கலந்து கொண்டு பானையை உடைத்து வெற்றி பெற்றார்.

மேலும், கோலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், கோடநாடு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தவறான கருத்துக்களை கூறி அதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக ஆளுநரை சந்தித்துள்ளதாகவும், அவரது கோரிக்கை உண்மைக்குப் புறம்பானது என்பதால் அதனை நிராகரிக்கும் படி தெரிவிக்க நாங்கள் ஆளுநரை சந்தித்ததாகவும் தெரிவித்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close