பிறந்தநாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 09:41 am
mgr-birthday-special-coin-released-today

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்த நாளையொட்டி இன்று அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நாணயத்தை வெளியிடுகிறார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா அருகே காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு இன்று திறக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிமுக சார்பில் மூன்று நாட்கள் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒருபகுதியாக, இன்று சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.

இதையடுத்து நூற்றாண்டு விழா நினைவாக எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயம் இன்று வெளியிடப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close