புதுச்சேரி: கடலில் குளிக்கத் தடை..!

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 09:45 am
the-ban-on-bath-in-the-sea

புதுச்சேரியில் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் திருநாள் பண்டிகையின் இறுதி நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று அனைவரும் குடும்பத்தினர், உறவினர்களுடன் கோவில்கள், கடற்கரை, பூங்காக்கள் என வெளியில் செல்வது வழக்கம். பெரும்பாலும், குடும்பத்துடன் மக்கள் கடற்கரைக்கே அதிகம் செல்வதுண்டு.  

இந்நிலையில், பாதுகாப்புக் கருதி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கடலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரை சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  படகு குழாம், கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close