டாஸ்மாக்கில் பொங்கலுக்கு ரூ.475 கோடி மது விற்பனை!

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 10:50 am
tasmac-sale-for-pongal-holidays

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 475 கோடி மதிப்பிலான மது விற்பனை ஆகியுள்ளது. 

வழக்கமாக தமிழகத்தில் பண்டிகை தினங்களில் டாஸ்மாக் விற்பனை அமோகமாக நடைபெறும். அது போன்று இந்த ஆண்டும் பொங்கலை முன்னிட்டு, 14ம் தேதியும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை தொடர் விடுமுறை நாட்களாக உள்ளன.

இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் விடுமுறை நாட்களில் ரூ. 600 கோடிக்கு மேல் மது விற்பனையாகும் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கடந்த 12ம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை 475 கோடி ரூபாய் அளவில் மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது 12ஆம் தேதி 105 கோடி ரூபாய், 13ம்தேதி 120 கோடி ரூபாய், 14ம்தேதி 110 கோடி ரூபாய், 15 ஆம் தேதி 140 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close