தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பில்லை: துணை சபாநாயகர் தம்பிதுரை

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 11:20 am
bjp-has-no-chance-at-all-in-tamil-nadu

தமிழகத்தில்பாஜக காலூன்ற வாய்ப்பில்லை என துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

கோவையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கோடநாடு விவகாரத்தில் எந்த உண்மையும் இல்லை எனவும் அது பினையப்பட்ட நாடகம் எனவும் தெரிவித்தார். அதிமுகவின் வெற்றியை சீர்குலைக்கவே எதிர்க்கட்சிகள் நாடகமாடுகின்றன என குற்றம்சாட்டினார். 

மேலும், தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க அதிமுகவுடன் கூட்டணி என்பது கேலிக்கூத்து என குறிப்பிட்ட அவர், பாஜவை சுமந்து கொண்டு செல்ல அதிமுக என்ன பாவம் செய்தது எனவும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பில்லை எனவும், அதிமுகவை வளர்க்கவே பாடுபாடுவோம், இன்னொரு கட்சியை வளர்கக் அல்ல எனவும் தெரிவித்தார். தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close