திருச்சியில் விண்வெளி ஆய்வு மையம்: இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 04:02 pm
space-research-centre-at-trichy-isro-chief

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் திருச்சி உள்ளிட்ட 5 இடங்களில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, "விண்வெளி ஆராய்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இதன் தொடக்கமாக ஒரு திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம். இளம் விஞ்ஞானிகளுக்கான இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இஸ்ரோவுக்கு அழைத்துச் செல்வோம்.

அவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அதன் மூலம் சிறிய செயற்கைக்கோளை உருவாக்குவது குறித்து நேரடி அனுபவத்தைப் பெற முடியும். வெற்றிகரமாக உருவாக்கப்படும் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும்.

அந்த மாணவர்கள் இஸ்ரோவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடலாம். ஒரு மாதம் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசு உதவ வேண்டும்.  

மூன்றாவதாக விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக தன் வேலையை முடித்த செயற்கைக்கோளை அழிப்பதற்குப் பதிலாக, அதை மாணவர்களுக்கு சோதனைத் தளமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் மாணவர்கள் செயற்கைக்கோள் குறித்து எளிதாக பிராக்டிகலாக இலவசமாகப் படிக்க முடியும்.

அத்துடன் இஸ்ரோவின் நேரடிக் கண்காணிப்பில் திரிபுரா, திருச்சி, நாக்பூர், இந்தூர் மற்றும் ரூர்கேலா ஆகிய பகுதிகளில் பயிற்சி விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close