இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. நிறுவனங்களுக்கு ஒப்புதல்கள் அளிப்பது தொடர்பாக இன்று இரண்டாம் கட்டமாக தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதையடுத்து, வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் 11 புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in