7 முறை ஜெயிலுக்குப் போனவன் நான் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 08:57 pm
i-was-jailed-7-times-cm-edappadi

கொடநாடு கொள்ளை, கொலை சம்பவங்களில் தனது பெயரை இழுத்தது திமுக செய்த சதி என்றும், 7 முறை சிறைக்குச் சென்ற தான், இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட போவதில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற மர்ம சம்பவங்கள் அனைத்தும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவின் பின்புலத்தில் தான் நடந்ததாக, தெஹல்கா நிறுவன முன்னாள் தலைவர் சாமுவேல் மாத்தியூ எடுத்த ஆவணப்படத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஆவணப்படம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து பூந்தமல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், எதிர்கட்சியான திமுக, சாமுவேல் மாத்தியூவை பின்னணியில் இருந்து இயக்குவதாக தெரிவித்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தன் மீது சுமத்தியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட சயான் மற்றும் மனோஜை, திமுக ஜாமீனில் எடுத்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கொடநாடு பிரச்னையை சட்டப்படி தவிடுபொடி ஆக்கி காட்டுவேன் என்றும், "7 முறை சிறைக்கு சென்றவன் நான். பொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்படப் போவதில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close