12 வயது தமிழக கிராண்ட்மாஸ்டருக்கு பிரதமர் மோடி பாராட்டு!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 06:04 am
modi-wishes-young-grandmaster-gukesh

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் கிராண்ட்மாஸ்டர் தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற 12 வயது தமிழக வீரர் குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த குகேஷ், செஸ் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். 12 வயதே ஆன அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய இளம் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 5 தங்க பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் கிராண்ட்மாஸ்டர் தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அவர் பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து குகேஷை பாராட்டி பிரதமர் மோடி ட்விட்டரில், "செஸ் விளையாட்டின் சாம்பியன். இளம் வீரர் குகேஷ், தனது சாதனை மூலம் நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். அவருடைய திறனும், ஆர்வமும் பாராட்டப்பட வேண்டியது. அவருக்கும், அவருடைய வருங்கால சாதனைகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று எழுதினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close