புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு இனி அனுமதி கிடையாது: AICTE அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 04:50 pm
no-new-engineering-colleges-from-2020-aicte

பொறியியல் கல்லூரிகளின் தரம் குறைந்துள்ளதால், 2020ம் ஆண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்று அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது. 

நாட்டில் ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் உருவாக்கி விட்ட நிலையில், தரமில்லாத கல்லூரிகள் அதிகரித்துவிட்டதாலும், அதில் பயிலும் மாணவர்களின் எதிர்க்கலாம் வீணாவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து ஆய்வு செய்ய, ஹைதராபாத் ஐஐடி சேர்மன் மோகன் ரெட்டி தலைமையில், அரசு குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த குழு, புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், கல்லூரிகள் புதிய தொழில்நுட்ப முறைகளை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

இதை ஏற்றுள்ள ஏ.ஐ.சி.டி.இ, 2020ம் ஆண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, கல்லூரிகளை ஆய்வு செய்து, கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு இடமிருந்தாலும், வருங்காலத்துக்கேற்ப புதிய தொழில்நுட்ப படிப்புகளை அறிமுகப்படுத்தினால் மட்டுமே, கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், ரோபோட்டிக்ஸ், 3டி பிரின்டிங், பிளாக்செயின் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான பொறியியல் படிப்புகளை துவங்குவதில் கல்லூரிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close