மெகா கூட்டணி உருகுலைந்து போகும்; தமிழிசை சவுந்தரராஜன்

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 05:40 pm
mega-coalition-will-be-melted

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி உருகுலைந்து போகும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " பிரதமர் மோடி ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டிருந்த எதிர்க்கட்சிகள், உதிரி கட்சிகளை ஒன்றாக சேர்த்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இவர்களை பார்த்து பிரதமர் மோடி பயந்து இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடியை பார்த்து எப்படி பயந்துள்ளார்கள் என்பது கொல்கத்தாவில் உள்ள மேடை காண்பிக்கிறது. 

தமிழை தவிர வேறு மொழியை கற்க மாட்டேன் என கூறிய திமுக தலைவர் ஸ்டாலினை பெங்காலி மொழியை பேச வைத்துள்ளார் பிரதமர் மோடி. ஒன்றுப்பட்ட இந்தியாவை கொண்டு வருவதாக கூறும் மெகா கூட்டணி உருபெறமுடியாத கூட்டணியாகும். இந்த கூட்டணி கருவிலேயே கலைய உள்ளது.

ஊழலை பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. தேர்தல் நேரங்களில் திமுக தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது கிடையாது. மோடி எந்த இடத்திலும் ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் போடுவேன் என கூறவில்லை. பதுக்கி வைத்துள்ள  கருப்பு பணத்தை எடுத்து வந்து மக்களுக்கு ரூ.15 லட்சம் பெரும் அளவிற்கு திட்டங்கள் தரப்படும் என்றார். அதில் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டமாக தந்து உள்ளார்.

மெகா கூட்டணியில் இருக்கும் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். நீங்களா நாங்களா என்று பார்த்து விடுவோம். பிரதமர் வேட்பாளராக முன்மொழித்த ராகுலை கூட்டணிக்கு அழைத்து செல்லாதது ஏன்? இப்படிப்பட்ட கேலிக்கூத்தான கூட்டணியை வேடிக்கை பார்க்கிறோம்" என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close