கோடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள தயார்: ஜெயகுமார்

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 06:05 pm
ready-to-face-cbi-inquiry-in-kodanadu-case

கோடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள அதிமுக தயார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடநாடு கொலை, கொள்ளையில் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டிய சயன் மற்றம் மனோஜ் ஆகியோர் திமுக கட்டுபாட்டில் உள்ளதாகவும், அதிமுக அரசை ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வெற்றி பெற முடியாதவர்கள் தான் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவருவதாகவும் குற்றம் சாட்டினார்.  

கோடநாடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள அதிமுக தயார் எனவும், எந்த தவறும் செய்யாத போது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார். இரட்டை வேடம் கொண்டவர்களை தமிழக மக்கள் அறிவார்கள் என தெரிவித்தார். மேலும், அதிமுகவிற்கு தனி அடையாளம் உள்ளது எனவும், அதிமுக தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் தான் நிச்சயம் கூட்டணி வைப்போம் எனவும் அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், பட்டாசு தொழிலுக்கு உரிமம் வாங்கிக்கொடுத்த அதிமுக அரசு, தற்போது உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கும் என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close