சென்னை: பார்சல் அஞ்சல் சேவை தொடக்கம்..!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 11:10 am
opening-parcel-mail-center

தமிழகத்தில் பிரத்யேக பார்சல் அஞ்சல் மையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. 

இந்திய அஞ்சல் துறை சார்பில் சென்னையில் பிரத்யேக பார்சல் அஞ்சல் மையம் அமைக்கப்பட்டு சோதனை அடிப்படையில் இயங்கி வந்தது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பிரத்யேக பார்சல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பார்சல் மையங்கள் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. 

இந்த பார்சல் அஞ்சல் மையம் மூலம், பதிவு பார்சல், வர்த்தக பார்சல், விரைவு பார்சல் என நாள்தோறும் 10,000 பார்சல்கள் கையாளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close