ஹிந்து மதத்துக்கு எதிராக செயல்படும் சிறுபான்மை கல்வி நிறுவனமான லயோலா கல்லூரி!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 07:58 pm
loyola-college-which-is-a-minority-institution-but-acts-against-hindus-and-nation

சென்னை லயோலா கல்லூரியில், ஓவிய கண்காட்சி என்ற பெயரில் ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், தேசநலனுக்கு எதிரான கருத்துகளும், மத்திய பாஜக அரசை தரக்குறைவாக விமர்சித்தும் சித்திரங்கள் இடம்பெற்றிருந்தது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அரசின் நிதியுதவியுடன் இயங்கும் ஓர் சிறுபான்மையின கல்லூரி, தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களின் மனம் புண்படுத்தும்படி செயல்பட்டுள்ளதற்காக, இக்கல்லூரி நிர்வாகம் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சென்னை,  நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நேற்று ஓவிய கண்காட்சி நடைபெற்றது. ஆனால், கண்காட்சி என்ற பெயரில் ஹிந்து மத உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாகவும், தேசநலனுக்கு எதிரான கருத்துகளையும் ,பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்தும் சித்திரங்கள் இடம்பெற்றிருந்தது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதில்,  "டாலர்மயமாகும் ராமராஜ்ஜியம்" என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்த ஓவியத்தில், ஹிந்துக்களின் கண்கண்ட தெய்வமான ராமரின் கையிலிருக்கும் வில், அமெரிக்க ரூபாயான டாலர் வடிவமாக மாற்றி வரையப்பட்டிருந்தது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நல்லெண்ணத்துடன், அந்திய நேரடி முதலீடுகள் வரவேற்கப்படுவது தாராளமய பொருளாதாரக் கொள்கையில் உலக அளவில் ஏற்றுகொள்ளப்பட்டுள்ள ஒன்றாகும்.அவ்வாறிருக்க, இந்திய பொருளாதாரம் அமெரிக்காவுக்கு விலை போய்விட்டதாக பொருள்படும்படி, விஷமத்தனத்துடன் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இதேபோன்று, பிரதமர் நரேந்திர மோடியை ஹனுமனாக சித்தரித்து மற்றொரு ஓவியம் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.  

"ஏகாதிபத்யதாசன்" என்ற தலைப்பிலான இந்த ஓவியத்தில், அனுமனின் இடது கையில் உள்ள கதையின் மேல்புறம் அமெரிக்க தேசியக்கொடி ஒட்டப்பட்டும், அவரது வலதுகையால் இந்தியாவின் வளங்களையெல்லாம் பெருமுதலாளிகளுக்கும், அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளுக்கும் தாரைவார்க்கப்படுவது போன்ற கருத்தும் விவரிக்கப்பட்டிருந்தது.

மேலும், எழுத்தாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கின் விசாரணை  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அவர் ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து  எழுதி வந்ததால், அவரை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் கொலை செய்தார்கள் என உரைக்கும் ஓவியமும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

"மீடு" பிரச்னையை பாரத மாதாவுடன்  இணைத்தும், "தூய்மை இந்தியா" திட்டத்தை காந்தியத்துடன் சேர்த்தும், ரஃபேல் விமான விவகாரத்தையும், பாஜகவையும் சம்பந்தப்படுத்தியும் எதிர்மறை கருத்துக்களுடனான ஓவியங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற தவறவில்லை.

சிறுபான்மையின மக்கள், இந்தியாவில் அவர்களுக்கான அனைத்து சலுகைகளுடன் நல்லமுறையில்தான் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் செயல்பாடுகள் பெரும்பாலும், இங்கு பெரும்பான்மை மக்களாக உள்ள ஹிந்துக்களுக்கு எதிராகவும், அவர்களின் மதஉணர்வை புண்படுத்தும் விதமாகவே உள்ளன

இவ்வாறு அவர்கள் சகிப்பின்மையோடு வாழ்வதற்கு என்ன காரணம்? அவர்களுக்கு உண்மையில் யார் மீது,  எதனால் கோபம்? போன்ற கேள்விகளை இந்த ஓவிய கண்காட்சி எழுப்பியுள்ளது.

மேலும்,  கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ராமர், அனுமன், பாரத மாதா என ஹிந்து மதக் கடவுள்களை ஓவியம் எனும் உன்னத கலையின் மூலம் கொச்சைப்படுத்தியுள்ளதை போன்று, ஏசு கிறிஸ்துவையோ, கிறிஸ்தவ மத  நம்பிக்கைகளையோ இவர்கள் விமர்சித்து விட முடியுமா? என்ற கேள்வியையும் இக்கண்காட்சி முன்வைத்துள்ளது.

அரசின் நிதியுதவியுடன் இயக்கும் ஓர் சிறுபான்மையின கல்லூரியில், ஹிந்து மதத்துக்கு எதிராகவும், தேசத்துக்கு விரோதமாகவும் கருத்துகளை கொண்ட ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளதற்காக, இக்கல்லூரியின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

அத்துடன் இந்த ஓவியக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தவர்களும், விஷமத்தனமான ஓவியர்களும் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இனிமேலும் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறாது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close