தலைமை செயலகத்தில் யாகம் நடந்தால் என்ன தவறு? - எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை கேள்வி !

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 11:52 am
tamilisai-soundararajan-tweet-about-ops

பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசின் அமைச்சர் அறையில் பெரும்பான்மை மக்கள் நம்பும் யாகம் நடந்தால் என்ன தவறு? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஓபிஎஸ்-இன் யாகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறையில் நேற்று அதிகாலை யாகம் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக அதற்கு முந்தைய நாளே பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அமைதியாக இந்த யாகம் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் ஓபிஎஸ்-இன் அறை புதுப்பிக்கப்பட்டுள்ளதால் தான் இந்த யாகம் நடத்தப்பட்டதாக ஒரு சாரார் கூறுகின்றனர். மற்ற சிலர், யாகம் நடத்தினால் நீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று ஜோசியர்கள் கூறியதாலும், மக்களவைத் தேர்தல் வருவத்தையொட்டியும்  யாகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அப்படி ஒரு யாகம் நடக்கவே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார். 

இந்த சூழ்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுகவுக்கு ஆதரவாகவும் அதே நேரத்தில் குழப்பமாகவும் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டமன்றத்திற்குள் கலகம் செய்த கழகம் தலைமைச் செயலகத்துக்குள் யாகம் செய்தால் மரபு மீரலா?சட்டமன்றத்தக்குள் வேட்டி சேலை கிழிப்பு மைக் மேஜை மண்டைஉடைப்பு போட்டி சட்டமன்றம் ஜெ.மீது தாக்குதல் என சட்டமன்ற மரபை காத்த?? திமுகவின் குற்றசாட்டு.... நடக்காத யாகத்தைப்பற்றி..அதற்கு வீரமணி திருமா ஜால்ரா" என்று பதிவிட்டுள்ளார். 

அதைத்தொடர்ந்த மற்றொரு பதிவில், "வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசின் அமைச்சர் அறையில் பெரும்பான்மை மக்கள் நம்பும் யாகம் நடந்தால் என்ன தவறு? இந்து மத எதிர்ப்பாளர்கள் விமர்சிப்பது உள்நோக்கம் கொண்டது. இந்து மதத்தை விமர்சிப்பது போல் பிற மதசடங்குகளை விமர்சிப்பார்களா?" என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் தமிழிசை தனது முதல் பதிவில், யாகம் நடக்கவில்லை என்பது போலவும், அடுத்த பதிவில், யாகம் நடந்தால் என்ன தவறு? என்பது போலவும் பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close