நாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 02:01 pm
government-employees-salary-cut

ஜாக்டோ, ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், நாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு அதற்கான சம்பளம் கிடையாது எனவும், மருத்துவ விடுப்பை தவிர்த்து அரசு ஊழியர்களுக்கு எவ்வித விடுப்பும் வழங்கப்படமாட்டாது எனவும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். மேலும், நாளை காலை 10.30 மணிக்குள், பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் பணிக்கு வராத அரசு ஊழியர்கள் தொடர்பான தகவல்களை தலைமைச் செயலகத்தில் உள்ள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close