சர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..?

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 03:45 pm
loyola-college-issue-how-it-can-be-happened-without-a-knowledge-of-co-ordinator

 லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சி, ஹிந்து மத உணர்வுகளை கொச்சைப்படுத்தும் நோக்கில், தங்களுக்கு தெரியாமல் தவறாக பயன்படுத்தப்பட்டுவிட்டது என இக்கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரான காளீஸ்வரன் விளக்கம் அளித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமலேயே இவ்வளவு பெரிய தவறு எப்படி நிகழ்ந்திருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் , லயோலா கல்லூரியின் கலை மற்றும் இலக்கிய பிரிவு சார்பில் வீதி விருது விழா, நேற்று மற்றும் நேற்று முன்தினம் (ஜனவரி 19, 20) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.  இதில், ஹிந்து மத கடவுள்களை கேவலாக சித்தரித்தும், மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் விதத்திலும் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

மொத்தத்தில், ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கில்தான் இந்த கண்காட்சி நடத்தப்பட்டதோ என எண்ணும் அளவுக்கு, படைப்பு என்ற பெயரில் கீழ்த்தரமான ஓவியங்கள் இதில் இடம்பெற்றிருந்தன.

இதுகுறித்து  வெகுசில ஊடகங்களில் மட்டுமே செய்திகள் வெளியானது. இதையடுத்து, இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த லயோலா கல்லூரி நிர்வாகத்துக்கு  ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இப்படியொரு கண்காட்சியை நடத்தியதற்காக, கல்லூரி நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் நாளை மறுநாள் (ஜன.23) லயோலா கல்லூரியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக இளைஞரணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து லயோலா கல்லூரியின் பேராசிரியரும், இந்த  நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர். காளீஸ்வரன் விளக்கம் அளித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

மாணவர்களின் ஓவிய படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் நோக்கில் நடத்தப்பட்ட கண்காட்சி, ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையிலும் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது உண்மையில் வருத்தத்துக்குரியது.

 இந்த தவறு குறித்து எங்கள் கவனத்துக்கு வந்ததும் சர்ச்சைக்குரிய ஓவியங்கள் கண்காட்சியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. எங்களது கவனக் குறைவால் ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் தவறுக்காக, கல்லூரி நிர்வாகம் சார்பில் வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

டாக்டர். காளீஸ்வரன் தான் இந்த கண்காட்சிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார். அவரே ஒப்புதல் அளித்துள்ளதுடன், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார்.

மேலும் நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமை தாங்கியுள்ளார். காளீஸ்வரனும் உடன் இருந்துள்ளார், ஓவியங்களை பார்வையிட்டுள்ளார். ஓவியங்களை பார்வையிடும்போது அவருக்கு தெரியாதா என்ன?  ஆனால், தற்போது அவரே தமது கவனக் குறைவால் இத்தவறு நிகழ்ந்துவிட்டதாக சர்வசாதாரணமாக கூறுவது எந்த விதத்தில் நியாயம்? என இந்து அமைப்புகள் கொந்தளித்துள்ளன. 

அதேபோன்று, சர்ச்சைக்குரிய ஓவியங்கள் வைக்கப்பட்டது குறித்து தங்கள் கவனத்திற்கு வந்த உடனே அவை நீக்கப்பட்டுவிட்டதாக கல்லூரி தரப்பு கூறுவதும் பொய் என்றே கூறப்படுகிறது. இன்று காலையில் தான் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து சர்ச்சைக்குரிய ஓவியங்களை அப்புறப்படுத்தியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close