தமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 03:57 pm
16-tn-fishermans-today-released-by-srilanka

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்களில் 16  பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடிக்க சென்றதாகக் கூறி, நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கடந்த 12 -ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து 13 -ஆம் தேதி, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த  11 மீனவர்களை கிளிநொச்சி அருகே, இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close