பட்ஜெட் தாக்கல்: அல்வா தயாரித்து சாப்பிட்ட பாஜக அமைச்சர்கள்!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 06:08 pm
printing-of-budget-documents-begins-with-halwa-ceremony

 

நாடாளுமன்றத்தில் வருகிற பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் அச்சடிப்பதற்கு முன்னதாக வழக்கமாக பாஜகவினர் அல்வா தயாரித்து பரிமாறும் நிகழ்வு இன்று டெல்லி நிதித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி இறுதியில் தொடங்கி நடைபெறும். அந்த வகையில் 2019ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அச்சடிப்பதற்கு முன்னர், பாஜகவினர் இனிப்பு செய்து பரிமாறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் பட்ஜெட் அறிக்கை தயாரிக்க இன்று தொடங்கப்பட்டதற்கு முன்னதாக, வழக்கப்படி அல்வா தயாரித்து, அனைவருக்கும் பரிமாறினர். 

டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா, சாலை போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்க் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close