அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் சென்னை பூர்வீகம் கொண்ட கமலா ஹாரிஸ்!

  shriram   | Last Modified : 21 Jan, 2019 10:25 pm
kamala-harris-to-contest-for-us-presidential-election

தமிழக பூர்வீகம் கொண்ட அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மீது வரலாறு காணாத அளவு சர்ச்சைகளும், விசாரணைகளும் நடந்து வருவதால், அவரை 2020ல் வீழ்த்த எதிர்க்கட்சியின் சார்பில் பலர் போட்டியிட தயாராகி வருகின்றனர். தங்களது வேட்பாளரை தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி நடத்தும் உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் மாதம் துவங்க இருக்கிறது. 50 மாகாணங்களிலும் நடக்கும் இந்த தேர்தலில், இதுவரை மட்டுமே 10 பேர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். 

எதிர்க்கட்சியின் வேட்பாளராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் 2020 அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை வீழ்த்துவதற்கு வாய்ப்பு மிக மிக அதிகம் என்பதால், இந்த உட்கட்சி தேர்தலே அதிபர் தேர்தல் அளவுக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஹவாய் மாகாணத்தை சேர்ந்த இந்திய பூர்வீகம் கொண்ட துள்சி கப்பார்ட் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக பூர்வீகம் கொண்ட கமலா ஹாரிஸ், தானும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றிய கமலா ஹாரிஸ், அம்மாநில மக்களிடையே பிரபலமடைந்தார். கடந்த 2016 தேர்தலில், அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தின் செனட் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை களமிறங்கியுள்ளவர்களில், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுபவர் கமலா ஹாரிஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன், சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு 1960ம் ஆண்டில் குடியேறியவராவார். அவரது தந்தை டொனால்ட் ஹாரிஸ், ஜமைக்கா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவராவார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close