அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் துவக்கம்

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 03:46 am
tn-govt-initiates-lkg-ukg-classes-in-government-schools

தமிழகத்தின் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை துவக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை எழும்பூரில் உள்ள ப்ரெசிடென்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைத்தார். 

ஏழை மாணவர்களுக்கு உதவியும் பொருட்டு, அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை சேர்க்கும் திட்டத்தை தமிழக அரசு துவக்கி வைத்தது. சென்னை ப்ரெசிடென்சி மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். விழாவில், துணை முதல்வர் ஓ.பி.எஸ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் சரோஜா, ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2381 அங்கன்வாடி மையங்களில் வகுப்புகள் துவக்கப்படுவதன் மூலம், 52,932 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில், மாணவர் மாணவியருக்கு பள்ளி சீருடை, புத்தகங்களை முதல்வர் வழங்கினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close