சென்னையில் குடியரசு தின ஒத்திகை..!

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 04:49 pm
republic-day-rehearsal-in-chennai

குடியரசு தின விழாவையொட்டி இரண்டாவது கட்ட அணிவகுப்பு ஒத்திகை சென்னை காமராஜர் சாலையில் இன்று நடைபெற்றது.

70 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வரும் சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 19ம் தேதி முதல் கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது கட்ட அணிவகுப்பு ஒத்திகை மற்றும் கலை நிகழ்ச்சிகள் சென்னை காமராஜர் சாலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

இதில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினர். இந்த கலை நிகழ்ச்சியை தொடர்ந்து முப்படை தளபதிகளின் அணிவகுப்பு ஒத்திகை, ஆளுநர் கொடியேற்றி வைக்கு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது 

பின்னர் காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறையினர் மற்றும் மாணவர் படையினர் கலந்துகொண்டு அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைகளின் வாகன ஒத்திகையும் நடைபெற்றது.

குடியரசு தினவிழாவையொட்டி கடந்த 19ம் தேதியில் இருந்து வருகிற 26-ஆம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் கட்ட அணிவகுப்பு ஒத்திகை வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அலங்கார வாகனங்கள் ஒத்திகை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close