அஜித்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது: கனிமொழி பாராட்டு

  Newstm News Desk   | Last Modified : 22 Jan, 2019 12:04 pm

kanimozhi-praises-ajith-kumar

நடிப்பில் மட்டுமே கவனம் என்றும் அரசியலில் வரும் எண்ணம் இல்லை என்றும் நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு திமுக எம்பி கனிமொழி பாராட்டு தெரிவித்துள்ளார். 

நடிகர் அஜித் நேற்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து திமுக மகளிரணி தலைவியும் எம்.பியுமான கனிமொழி பேசியுள்ளார். 

அவர், "அரசியலுக்கு வரக்கூடாது என நடிகர் அஜித் முடிவு எடுத்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார். மேலும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close