மாணவர்கள் மூலம் தயார் செய்யப்பட்டுள்ள சிறு ரக செயற்கைக்கோள் நாளை மறுநாள் 'கலாம் செயற்கைக்கோள்' என்ற பெயரில் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கஜா புயல் நிவாரணமாக ரூ.14,35,672 காசோலையை இஸ்ரோ தலைவர் சிவன் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், "இந்தியாவில் 6 இடங்களில் மாணவர்களுக்கான பயிற்சி கூடம் அமைக்கப்பட உள்ளது. ஜலந்தர் மற்றும் அகர்டாலா ஆகிய இரண்டு இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாணவர் பயிற்சி கூடம் திருச்சியில் அமைக்கப்படும் இது தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமல்லாமல், தென் இந்தியாவில் உள்ள மாணவர்களும் இந்த பயிற்சி கூடத்தில் சேரலாம். மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்களை இஸ்ரோ சோதனை செய்து பெற்றுக்கொள்ளும்.
பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்றும் ஆய்வக கூடத்தை பார்வையிடவும் வசதிகள் செய்யப்படும். மாணவர்கள் மூலம் தயார் செய்யப்பட்டுள்ள சிறு ரக செயற்கைக்கோள் நாளை மறுநாள் கலாம் செயற்கைக்கோள் என்ற பெயரில் விண்ணில் ஏவப்படுகிறது. இது போல் வரும் காலங்களில் மாணவர்கள் தயார் செய்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்" என கூறினார்.
newstm.in