இளைஞர்கள் ஆரோக்கியமான அரசியலை மேற்கொள்ள வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 03:07 pm
young-people-should-make-healthy-politics

இளைஞர்கள் ஆரோக்கியமான அரசியலை மேற்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். 

திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் மூலம் தண்ணீர் பிரச்சனை இருக்காது எனவும், இத்திட்டம் சாத்தியப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகத்தில் திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்கள் நவீனமாக மாறி உள்ளதாகவும், மத்திய அரசின் திட்டங்களால் அனைத்து நகரங்களும் வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் தெரிவித்த அவர், ஸ்டாலின் போன்றவர்கள் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது என கேட்டுக்கொண்டே இருக்கட்டும், நாங்கள் செயலாற்றி கொண்டே இருப்போம் என தெரிவித்தார். 

மேலும், இளைஞர்கள் ஆரோக்கியமான அரசியலை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், மக்கள் போடும் வாக்குகளை நம்ப வேண்டும்  என்றும் வாக்கு இயந்திரத்தில் எந்த விதத்திலும் தவறிழைக்க முடியாது என தலைமை தேர்தல் அதிகாரியே தெரிவித்திருப்பதையும் அவர் குறிப்பிட்டார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close