அஜித் தைரியமானவர்: பாராட்டிய அமைச்சர் ஜெயகுமார்

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 04:02 pm
minister-jayakumar-praises-ajith

நடிகர் அஜித் தைரியமானவர் என்றும் தொழில் பக்தி கொண்டவர் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் புகழ்ந்துள்ளார். 

சென்னை எம்.ஆர்.சி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அதிமுக முடுக்கிவிட்டுள்ளது என்றும் கூறினார். கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். 

கொடநாடு விவகாரத்தில் ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டிய ஜெயக்குமார், எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என குறிப்பிட்டார்.

அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் அஜித்தின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்த ஜெயக்குமார், நடிகர் அஜித் தொழில் பக்தி கொண்டவர் என பாராட்டினார். மேலும் கருணாநிதி முன்பே தைரியமாக மேடையில் பேசியவர். பலர் அரசியலில் இப்போ வருவேன் அப்போ வருவேன் என்று கூறி வரும் நிலையில் இவர் தனது பணியை மட்டுமே செய்கிறார்" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close