சென்னையில் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கீழ் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
2வது நாள் நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையாநாயுடு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்ச்சியின் இறுதியில், தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
newstm.in