பள்ளிகளை மூடக்கூடாது : பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 10:01 am
schools-should-not-be-closed

ஜாக்டோ, ஜியோ போராட்டம் காரணமாக அரசு பள்ளிகளை மூடக்கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தால் 80 சதவீதம் அரசு பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. 

இந்நிலையில், ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக அரசு பள்ளிகளை மூடக்கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  மேலும் பள்ளிகள் திறந்திருப்பதை சத்துணவு அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களை கொண்டு பள்ளிகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close