கோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 03:45 pm
interview-with-police-officer-on-kodanad-murder-issue-will-be-release

கோடநாடு கொலை தொடர்பான வழக்கை விசாரித்த காவல் அதிகாரியின் பேட்டியை தக்க சமயத்தில் வெளியிடுவேன் என  பத்திரிகையாளர் மேத்யூ தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தனது 23 ஆண்டு கால பத்ரிகையாளர் பணியில், தவறு செய்த பலரை வெளிக்காட்டியுள்ளேன். கோடநாடு விவகாரம் தொடர்பான எனது குற்றச்சாட்டிற்கு இதுவரை முதலமைச்சர் பழனிசாமி பதிலளிக்கவில்லை. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை. ராபர்ட் வதோராவை பற்றிய செய்தி எடுத்தபோது எனக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக கூறியது போல், தற்போது இந்த விவகாரத்தில் திமுக இருப்பதாக கூறுகின்றனர். 

சயன், மனோஜிற்கு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற எனது வழக்கறிஞர் தான் அவர்களை ஏற்பாடு செய்தார். இந்த கோடநாடு கொலை தொடர்பான வழக்கை விசாரித்த காவல் அதிகாரியின் பேட்டி கூட என்னிடம் உள்ளது. தக்க சமயத்தில் அதை வெளியிடுவேன். ஆறுமுகசாமி ஆணையத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. கோடநாடு விவகாரத்தை பொறுத்தவரை சட்டரீதியாக சந்திப்பேன்" என தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close