காவலர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது: தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 04:25 pm
dgp-rajendran-ordered-that-traffic-police-won-t-be-used-mobile-phones-while-in-duty

உதவி ஆய்வாளருக்கு கீழ் பதவியில் உள்ள காவலர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பணியின் போது காவலர்கள் அதிகளவில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், கீழ் பதவியில் உள்ள காவலர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும் அதிலும் குறிப்பாக முக்கிய பிரமுகர்களின் பந்தோபஸ்தின் போது போக்குவரத்து காவலர்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் தனக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கு முன்பாக பேசினார். அவர், "இன்று காலையில் நான் ஐகோர்ட்டுக்கு வரும் வழியெல்லாம் போக்குவரத்து சிக்னல்களில் போக்குவரத்து போலீஸ்காரர்கள் இருந்ததை பார்த்தேன். அத்தனை பேரும், அங்கு சர்வ சாதாரணமாக உட்கார்ந்துக் கொண்டு செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யாரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை செய்யவில்லை. சிக்னலில் என்னுடைய கார் உள்பட ஏராளமான வாகனங்கள் நிற்கின்றன. பச்சை விளக்கு எரியத் தொடங்கியதும், அனைத்து வாகனங்களும் புறப்படும் நேரத்தில், ஒரு பெண்மணி சாலை குறுக்கே ஓடுகிறார். அதை கண்டுக் கொள்ளாமல், போலீஸ்காரர் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

என்னைப் பொருத்தவரை பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு தான் முக்கியம். அந்த பெண்மணி மீது வாகனங்கள் மோதி இருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஒரு இடம் மட்டுமல்ல, சென்னை முழுவதும் 99 சதவீத போக்குவரத்து போலீஸ்காரர்கள் வேலை செய்வது இல்லை.

சாலையோரம், சிக்னல் அருகே உள்ள இரும்பு சேரில் உட்கார்ந்துக் கொண்டு போன் பேசுவது அல்லது போனில் வாட்ஸ்அப் பார்ப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

தன் மேஜைக்கு மேல் செல்போன்களை வைத்துக் கொண்டு, வழக்கு விசாரணைகளுக்கு இடைஇடையே செல்போனை நோண்டிக் கொண்டிருந்தாலோ, பேசினாலோ எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரிடம் இந்த நிலவரத்தை கூறி, இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என வருகிற 30ம் தேதி எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார்.

நீதிபதியின் இந்த உத்தரவையடுத்து தான் தமிழக டிஜிபி, 'காவலர்கள் செல்போன் உபயோகிக்கக்கூடாது' என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close