பெரியார் பேருந்து நிலையம் பணிகள் ஒத்திவைப்பு: மாநகராட்சி ஆணையர்

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 09:47 am
periyar-bus-stand-modernization-work-adjournment

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை நவீனப் படுத்தும் பணிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல்வேறு இடங்களில் நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெரியார் பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றும் பணிகள் இன்று முதல் நடைபெறும் எனவும், இதன் காரணமாக பேருந்து நிலையம் மூடப்படும் எனவும் மாநகாராட்சி அறிவித்திருந்தது. 

இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 27ம் தேதி தமிழகம் வரவுள்ளாதால் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close