திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 2வது நாளாக ஆய்வு..!

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 10:25 am
inspect-the-2nd-day-in-statues

திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் தொல்லியல் துறை மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் உள்ள சிலைகளின் தொன்மை தன்மை மற்றும் உண்மையான தன்மை குறித்து தொல்லியல் துறை மற்றும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று திருவாருர் தியாகராஜர் கோவில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.  இன்று தொடர்ந்து 2வது நாளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் பாதுகாப்பு மையத்தில் திருவாரூர், நாகை, கடலூர்,  தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்களின் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 4,539 சிலைகளில் இதுவரை 829 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வில், சிலைகளின் நீளம், உயரம், உலோகத்தின் தன்மை, புகைப்படங்கள் உள்ளிட்டவை சோதனை செய்யப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close