ஜெ. நினைவு இல்லம்: வரி நிலுவையை செலுத்தினால் ஆட்சேபமில்லை.. ஐ.டி..

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 01:17 pm
pay-the-tax-outstanding

வரி நிலுவையை செலுத்திவிட்டால் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபமில்லை என வருமானவரித்துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது. 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற தடைக்கோரிய வழக்கில் வருமானவரித்துறை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், வரி நிலுவைக்காக கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் போயஸ் கார்டன் இல்லம் முடக்கப்பட்டுள்ளதாகவும், ரூ. 10.12 கோடி சொத்துவரி மற்றும் ரூ.6.62 கோடி வருமான வரி நிலுவைக்காக ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஐதராபாத் வீடு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள கடை, செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள கட்டடம் என 4 சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், வரி நிலுவையை செலுத்திவிட்டால் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close