வேலைநிறுத்த போராட்டம் தொடரும்: ஜாக்டோ -ஜியோ அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 03:28 pm
protest-will-be-continues-jactto-geo

தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில்கடந்த இரு தினங்களாக தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

நேற்று போராட்டம் நடத்தியவர்களில் பலர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. 

தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு குறித்து இன்று பிற்பகல் ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதில் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பு உறுதிபட தெரிவித்துள்ளது. 

இதனால் நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதால் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றே பார்க்கப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close