3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு: முதல்வர் பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 07:48 pm
more-than-3-lakh-crores-investment-cm-edappadi-palanisamy

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 3 லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. இதில் மொத்தம் 3 லட்சத்தி, 431 கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய, சர்வதேச நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  304 நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவுள்ளதாகவும், இதன் மூலம், 10.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close