மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேபிள் சேவைகள் முடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 09:56 pm
cable-services-stopped-in-protest-against-trai-ruling

புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள கேபிள் விதிமுறைகளால், பொதுமக்களும் கேபிள் ஆபரேட்டர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக கூறி, தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஒரு நாள் கேபிள் சேவைகள் முடக்கப்பட்டன.

மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய விதியை கொண்டுவந்தது. இதன்மூலம் டிடிஎச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள், பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டனர்.

கேபிளில் இலவச சேனல்களுக்கு அடிப்படை கட்டணமாக 155 ரூபாய் கட்ட வேண்டும் என்றும், அதற்கு மேல் தங்களுக்கு வேண்டிய ஒவ்வொரு சேனலுக்கும் தனித் தனியாக கட்டணம் கட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் ரூ.500 ரூபாய் வரை செலவழிக்க வேண்டி இருப்பதால், பலர் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர்கள் இன்று ஒருநாள் கேபிள் சேவை முடக்க முடிவெடுத்து, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கேபிள் சேவைகள் முடக்கியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close