தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி!

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 10:00 am
tamilisai-soundararajan-tweet-about-loyola-college-dmk

லயோலா கல்லூரி ஒவ்வொரு முறையும் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடுவதால் தானே ஓவிய கண்காட்சிக்கு திமுக கண்டனம் தெரிவிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் நடந்த வீதி விருது விழா கண்காட்சியில் இந்து மதத்தையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து சில ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. பின்னர் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட பின்னர் காவல்துறையினர் சர்சைக்குரிய ஓவியங்களை அப்புறப்படுத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் லயோலா நிர்வாகமும் மன்னிப்பு கோரியது. 

இந்து மதத்தையும், இந்துக்களையும் அவமதிக்கும் வகையில் ஓவியங்களை வைத்து கண்காட்சி நடத்திய லயோலா கல்லூரியை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டிக்காதது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பியிருந்தார். 

பின்னர் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கல்விநிறுவனங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கவேண்டும் கிறிஸ்த்மஸ் விழாவில் இந்துக்களை இழித்தும்பழித்தும் விமர்சிக்கும் @mkstalin லயோலாகல்லூரியின் இந்துமத அவமதிப்பு கண்காட்சியை ஏன் கண்டிக்க வில்லை?லயோலாகல்லூரி ஒவ்வொருமுறையும் திமுக ஆதரவு தேர்தல் கருத்து கணிப்பு வெளியிடுவதால்தானே?" என குறிப்பிட்டுள்ளார்.  

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close