கொடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 12:25 pm
kodanadu-estate-issue-sc-dismissed-the-petition

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சமீபத்தில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். கொடநாடு சம்பவத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று அந்த வீடியோவில் குற்றவாளிகள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இது தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். கொடநாடு சம்பவத்தில் முதல்வர் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வீடியோவில் உள்ள தகவல்களை வைத்து முதல்வர் மீது குற்றம்சாட்ட முடியாது என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொடநாடு சம்பவத்திற்கும், சாமுவேலுக்கும் என்ன தொடர்பு? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close