போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை- தமிழக அரசுக்கு நீதிமன்றம் பதிலடி!

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 02:10 pm
madras-hc-opinion-about-jactto-geo-protest

நீதிமன்ற உத்தரவுகளை மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு என ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு 4வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றைக்குள் (25ம் தேதி) பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை மீறியும், அவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுளள்னர். 

எனவே, உத்தரவை மீறி போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் நிராகரித்தது.

பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தான் நீதிமன்றம் உத்தரவிட்டதே தவிர, போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close