ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த தலைமை செயலக ஊழியர்கள்!

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 02:11 pm

jactto-geo-protest-tn-secretariat-employees-are-also-involved-in-protest

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்களும் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு 4வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றைக்குள் (25ம் தேதி) பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உகூறியதை மீறியும், அவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுளள்னர். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் நீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து,  தலைமைச் செயலக ஊழியர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் வேலை பாதிப்பு அடையாத வகையில், மதிய உணவு இடைவேளையில் மட்டும் போராட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close