பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருது பெற்ற திருவண்ணாமலை கலெக்டர்!

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 03:53 pm
tiruvannamalai-collector-receives-union-government-award-for-creating-awareness-on-girl-children-protection

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நேற்று டெல்லியில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளை பாதுகாப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தலைநகர் டெல்லியில் விழா நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு அமைச்சர் மேனகா காந்தி விருது வழங்கினார். 

முன்னதாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் அதிரடி நடவடிக்கையால் அம்மாவட்ட காப்பகத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான 50 சிறுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மக்களின் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close