நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 04:18 pm
naam-tamizhar-katchi-seeman-press-meet

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழகத்தில் இருக்கும் எந்த கட்சியாலும் நல்லாட்சி வழங்க முடியாது.  நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடும். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பிரதமர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார். 

மேலும், "விரைவில் மக்களவைத் தேர்தல் வருவதால் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை" என்று தெரிவித்தார். 

பின்னர் அஜித்தின் அறிக்கை குறித்த கேள்விக்கு, 'அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என்று தெளிவாக கூறியது பாராட்டுக்குரியது. இது அவரின் தீர்க்கமான முடிவு" என பதிலளித்தார்.

தொடர்ந்து, 'சிம்பு தனது கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்ய சொன்னது விரக்தியின் வெளிப்பாடு தான்' என்று கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close