போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்! - தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 04:27 pm
tn-govt-sent-notice-to-teachers-who-are-all-protesting

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இதுவரை சுமார் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தமிழக அரசு. 

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு 4வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இன்றைக்குள் (25ஆம் தேதி) பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் கூறியும், அதனை பொருட்படுத்தாமல் போராட்டம் தொடர்கிறது. 

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இன்று கூறியதை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 9,672 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close