மோகன்லாலுக்கு பத்ம பூஷன்; பங்காரு அடிகளார், பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 10:37 pm
padma-awards-announced-by-central-government

மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதும், மதுரை சின்னப்பிள்ளை, பங்காரு அடிகளார், நடனக்கலைஞர் பிரபுதேவா, பாடகர் சங்கர் மஹாதேவன் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாட்டில் சிறந்து விளங்கும் குடிமகன்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது. 112 விருதுகளில், 4 பத்ம விபூஷண், 14 பத்ம பூஷன், மற்றும் 94 பத்ம ஸ்ரீ விருதுகள் அடங்கும். இதில், சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நடனக்கலைஞர் டீஜன் பாய், ட்ஜிபௌட்டி நாட்டின் அதிபர் இஸ்மாயில் ஓம்கார் குவெல்லா, எல் & டி நிறுவன தலைவர் ஏ.எம்.நாயக், மஹாராஷ்ட்ராவை சேர்ந்த நாடகக்கலைஞர் பல்வந்த் மோரேஷ்வர் புரந்த்ரே ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மலையாள நடிகர் மோகன்லால், கேரளாவை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சின்னப்பிள்ளை, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், நடிகர் பிரபுதேவா, கால்பந்து வீரர் சுனில் சேத்த்ரி, பாடகர் ஷங்கர் மஹாதேவன் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ  விருதுகள் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விருதுகள் பெறுபவர்களில் 21 பெண்கள், 3ம் பாலினத்தை சேர்ந்த ஒருவர், என்.ஆர்.ஐ அல்லது வெளிநாட்டவர்கள் 11 பேர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close